Latest Articals

TNPSC Annual Planner 2025 Exam Date 


TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2025 அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு.. அடுத்தடுத்து வெளியான ஹேப்பி நியூஸ்!..


10th, 12th படித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலை- 2000 பணியிடங்கள் அறிவிப்பு உடனே அப்ளை செய்யும் வழிமுறை!..


எண்ணெய் நிறுவனத்தில் 2236 காலியிடங்கள் 10th, 12th,ITI,டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- முழு விவரம் உள்ளே!..


10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவல் படையில் வேலை- 545 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!- சம்பளம் ரூ.69,000 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை..


தமிழக சுகாதாரத் துறையில் 12th முடித்தவர்களுக்கு வேலை- ரூ.23,000 சம்பளம் தேர்வு கிடையாது- அப்ளை செய்யும் முழு விவரம் உள்ளே..


ரேஷன் கடைகளில் 2000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்கும் முழு விபரம் இதோ!


சற்றுமுன் TNPSC தேர்வர்களே காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு- வெளியான முக்கிய தகவல்!.. TNPSC Group 4 Vacancy Increase Chance 2024

சற்றுமுன் TNPSC தேர்வர்களே காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு- வெளியான முக்கிய தகவல்!..

TNPSC Group 4 Vacancy Increase Chance 2024

TNPSC Group 4 Vacancy Increase Chance 2024 டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வின் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10,000 ஆக உயர வாய்ப்பு இச்செய்தியை குறித்து விவரமாக காணலாம் வாருங்கள்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய இத்தேர்வை 15 லட்சத்து 91 ஆயிரம் பேர் எழுதினர். இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சிஎன்ற போதிலும் தேர்வெழுதியவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Group 4 Vacancy Increase Chance 2024
TNPSC Group 4 Vacancy Increase Chance 2024

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட காலியிடங்களுடன், தேர்வு முடிந்த பிறகு செப்.11-ம் தேதி, கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, தற்போது மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 6,720 ஆக உயர்ந்துள்ளது. முதலில் தேர்வு முடிவுஅடுத்த ஆண்டு ஜனவரி மாதம்வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் அக்டோபர் மாதமே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது விடைத்தாள் மதிப்பீட்டின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பல்வேறு துறைகளில் இருந்து காலியிடங்கள் வந்துகொண்டிருப்பதால் குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்கள் கணிசமாக அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

10,000 பணியிடங்கள்

குரூப்-4 தேர்வு முடிவு அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியிடப்பட உள்ளது. குரூப்-4 கேடரில் உள்ள பதவிகள் அரசின் பல்வேறு துறைகளில் இருந்து தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. ஏற்கெனவே நடத்தப்பட்ட ஒரு தேர்வில், அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையை தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் வரையில் அதிகரிக்க முடியும்.

அதேபோல், அத்தேர்வில் குறிப்பிட்ட கல்வித்தகுதியுடைய வேறு பதவிகளுக்கான காலியிடங்கள் வந்தாலும் அவற்றையும் சேர்க்க முடியும். அந்த வகையில், குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். எத்தனை இடங்கள் வரும் என்பதை தற்போது குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

ஏறக்குறைய  10 ஆயிரம் பணியிடங்கள் வரலாம் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. அண்மையில் நடந்து முடிந்த குரூப் 2 மற்றும் குரூப் 2a முதல் நிலை தேர்வுக்கான முடிவுகள் டிசம்பரில் வெளியாக உள்ளன குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்விலும் காலி இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது.

Leave a Comment