வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்- வரப்போகிறது நியூ அப்டேட்!..
Whatsapp New Update Oct 8
Whatsapp New Update Oct 8 வாட்ஸ்அப் தனது பயனர்களுக்காக இரண்டு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது.இந்த அம்சங்கள் தனியுரிமை மென்ஷன் மற்றும் ஸ்டேட்டஸ் ரீஷேர் ஆகியவை அடங்கும். இந்த புதிய அம்சங்கள் விரைவில் அனைவருக்கும் பயன்படுத்த கிடைக்கும்.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் புதிய அப்டேட்களில் பிரைவேட் மென்ஷன் அம்சமும் ஒன்று. இந்த அம்சத்தின் உதவியுடன் நீங்கள் எந்த ஸ்டேட்டஸை பதிவிடும் போதும் மற்றொரு பயனரையும் உங்களால் குறிக்க முடியும்.
அதாவது, நீங்கள் யாருக்காக ஸ்டேட்டஸ் வைக்கிறீங்களோ அவர்களை இந்த புதிய அம்சத்தின் மூலமாக டேக் செய்யலாம். இது நீங்கள் என்ன குறியிட்டீர்கள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தும். இது எல்லோருக்கும் தெரியாது. டேக் செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே காண்பிக்கும்.
வாட்ஸ்அப் 2ஆவது புதிய அம்சம்:
இந்த 2ஆவது புதிய அம்சம் என்னவென்றால் ரீஷேர்.
அதாவது மறுபடியும் அனுப்பவது. எல்லோருமே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைப்போம். அப்படி வைக்கப்படும் ஸ்டேட்டஸ் உங்களுக்கு பிடித்திருந்தால், அந்த ஸ்டேட்டஸை உங்களுக்கு அனுப்ப சொல்லலாம். அந்த ஸ்டேட்டஸ் உங்களது போனிலும் ஸ்டேட்டஸாக போடப்படும்.
மற்றவர்கள் போட்ட ஸ்டேட்டஸை மீண்டும் ஷேர் செய்து, உங்களது போனிலும் ஸ்டேட்டஸாக கூட நீங்கள் வைக்கலாம். இந்த 2 புதிய அம்சங்கள் குறித்து வாட்ஸ்அப் தங்களது அதிகாரப்பூர்வ் பக்கத்தில் அறிவித்துள்ளது. விரைவில் இந்த புதிய அம்சங்களை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எப்படி ஒருவரை டேக் செய்து கொள்ளலாம்:
முதலில் உங்களது போனில் வாட்ஸ்அப் ஓபன் செய்து கொள்ள வேண்டும்.
வாட்ஸ்அப் சென்று ஸ்டேட்டஸ் உருவாக்கி கொள்ள வேண்டும்.
டெக்ஸ்ட் பீல்டில் @ டைப் செய்து யாரை டேக் செய்து கொள்ள விரும்புகிறீர்களோ அவர்களது பெயரை டேக் செய்ய வேண்டும்.
இது நீங்கள் யாரை டெக் செய்தீர்களோ அவர்களால் மட்டுமே பார்க்க முடியும். எல்லோராலும் பார்க்க முடியாது.
யாருடைய பெயரை குறிப்பிட்டீர்களோ அவர்களால் மட்டுமே பார்க்க முடியும்.