Magalir Urimai Thogai New Update Oct 9
மகளிர் உரிமை திட்டம் ரூ.1000 வெளியாகும் புதிய திட்டம் – சூப்பர் அப்டேட்
Magalir Urimai Thogai New Update Oct 9 : தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டமானது முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்னும் பெயரில் தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் ஆனது வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மாதம் வழங்கப்படக்கூடிய இந்த திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று துவக்கப்பட்டது.

புதுமைப்பெண்
அதேபோல தமிழகத்தில் உள்ள மகளிர் பெண்கள் படிப்பதற்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு புதுமைப்பெண் என்ற திட்டத்தின் மூலம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படுகிறது. இது உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு மாதாமாதம் பெண்கள் உயர்கல்வி படித்து முடிக்கும் வரை இந்த உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ் புதல்வன் திட்டம்
தமிழகத்தில் உள்ள மாணவர்களும் உயர்கல்வி படிப்பதற்காக தமிழ் புதல்வன் திட்டம் மூலம் மாதம் ரூபாய் 1000 ஆனது வழங்கப்பட்டு வருகிறது இந்த திட்டத்தின் மூலம் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் பயன்பெறலாம் அவர்கள் கல்லூரி படிப்பு முடியும் வரை இந்த உதவி தொகை வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த வகையில் தமிழக அரசு உதவித்தொகைகளை உரிமைத் தொகைகளையும் வழங்கும் போது அதற்கு ஒரு குறிப்பிட்ட தகுதிகள் மற்றும் வரையறைகள் நிர்ணயித்துள்ளது. தமிழ் புதல்வன் புதுமைப் பெண் உள்ளிட்ட திட்டங்களில் உயர்கல்விக்கு ரூபாய் 1000 பெறக்கூடிய மாணவ மாணவிகள் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் உள்ளிட்ட தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Magalir Urimai Thogai Latest Update
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கும் தமிழக அரசு தகுதிகளை நிர்ணயித்து தகுதி வாய்ந்த மகளிருக்கு இந்த ஆயிரம் ரூபாய் உதவித்தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த திட்டத்தில் கூடுதல் சிறப்பாக திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. ஏற்கனவே ஒரு குடும்பத்தில் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை குடும்பத் தலைவி பெற்று வரும் சூழலில் அந்த குடும்பத்தில் இருந்து திருமணம் ஆகி தனியாக புதிய ரேஷன் கார்டு பெற்று புதிய குடும்ப தலைவியாக பொறுப்பேற்றுள்ள குடும்பத் தலைவிகளுக்கும் ரூபாய் ஆயிரம் வழங்கக்கூடிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதன் மூலம் புதியதாக ரேஷன் கார்டு பெற்ற குடும்பத் தலைவிகள் மகிழ்ச்சி பெறுவார்கள் விரைவிலேயே இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது என்பது கூடுதல் சிறப்பு.