மாகாளய அமாவாசை ராமேஸ்வரம் சென்று வர தமிழ்நாடு அரசு சிறப்பு ஏற்பாடு!..
TN Govt Special Arrangement to Visit Rameswaram on Mahalaya Amavasi
TN Govt Special Arrangement to Visit Rameswaram on Mahalaya Amavasi: மாகாளய அமாவாசை ராமேஸ்வரம் சென்று வர தமிழ்நாடு அரசு சிறப்பு ஏற்பாடு. மாகாளய அமாவாசை என்பது மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ள மிக முக்கிய தினமாகும்.
பொதுமக்கள் பெரும்பாலும் இந்த சிறப்பு தினத்தில் தமிழகத்தின் புண்ணிய தளமாக கருதப்படும் ராமேஸ்வரத்தில் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். இதனால் அன்றைய தினத்தில் ராமேஸ்வரத்தில் தமிழகம் முழுவதும் இருந்து மட்டுமல்லாமல் கர்நாடகாவிலும் இருந்தும் பொதுமக்கள் வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்ய வருவார்கள்.

இவர்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் அக்டோபர் ஒன்றாம் தேதி செவ்வாய்க்கிழமை இயக்கப்படுகின்றது. இந்த சிறப்பு பேரானது தமிழகத்தின் முக்கிய பகுதிகளான சென்னை, சேலம் கோயம்புத்தூர் மற்றும் கர்நாடகாவின் பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது.
இந்த சிறப்பு பேருந்துக்கு முன்பதிவானது தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளும் வசதியானது ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.