TNPSC Group 4 Exam Date 2025 Announcement
TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2025 அறிவிப்பு
TNPSC Group 4 Exam Date 2025 Announcement : டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி வெளியாகிறது. 2025ம் ஆண்டிற்கான தேர்வு திட்டத்தை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது.

TNPSC டி.என்.பி.எஸ்.சி., அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் காலியாக உள்ள அரசுத் துறைகளின் பொறுப்புகளுக்கு ஆட்கள் நியமிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், அடுத்தாண்டுக்கான தேர்வுத்திட்டம் (பிளானர்), இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறுகிறது.
குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி வெளியாகிறது – 2025ம் ஆண்டிற்கான தேர்வு திட்டத்தை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.
tnpsc.gov.in என்ற இணையத்தில் ஆண்டுத் திட்டத்தை அறிந்து கொள்ளலாம்.
அடுத்தாண்டுக்கான தேர்வுத்திட்டம் படி, குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி வெளியிடப்பட்டு, ஜூன் 15ம் தேதி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்., 25ம் தேதி வெளியிடப்பட்டு, ஜூலை 13ம் தேதி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2025 ஆம் ஆண்டுக்கான தேர்வு திட்டத்தை டிஎன்பிஎஸ்சி http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.