டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு.. அடுத்தடுத்து வெளியான ஹேப்பி நியூஸ்!..
TNPSC Group 4 Vacancy 2024 Increased 2208
TNPSC Group 4 Vacancy 2024 Increased 2208 இந்த ஆண்டு tnpsc குரூப் 4 தேர்வு எழுதிய தேர்வுகளுக்கு டி என் பி எஸ் சி அடுத்தடுத்த மகிழ்ச்சியான செய்திகளை அறிவித்த வண்ணமே வருகிறது. அதாவது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது இன்று மேலும் 2208 காலி பணியிடங்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக குரூப் 4 தேர்வுக்கு என்று அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வானது ஜூன் மாதம் 9-ம் தேதி நடைபெற்றது. அந்த தேர்வுக்கு முதலில் குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிப்பாக 6244 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான தேர்வை நடத்துவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.
இதில் கிராம நிர்வாக அலுவலர் பில் கலெக்டர் இளநிலை உதவியாளர் ஆவின் நிர்வாக உதவியாளர் வனக்காவலர் தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல பதவிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையுமானது தேர்வை நடத்தியது.
இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான காலி பணியிடங்களில் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் முதற்கட்டமாக 480 காலி பணியிடங்கள் அதிகரிப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.
அதன்படி மொத்த காலி பணியிடங்களில் எண்ணிக்கை 624 ஆக அதிகரித்தது. எந்த தேர்வை சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வுகள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர் தமிழ்நாடு முழுவதும் சுமார் 7000க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வானது நடைபெற்று சுமார் 15 லட்சத்துக்கு அதிகமானோர் தேர்வு எழுதி இருந்தனர்.
இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் ஆனது அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என டிஎன்பிசி அதிகாரப்பூர்வமாக தகவலின் முதலில் தெரிவித்து இருந்தார்கள். எனவே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேர்வு முடிவுகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்த்து இருந்த நிலையில் தேர்வுகளுக்கு அடுத்தடுத்த மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளது.
அதன்படி இன்று 2208 காலி பணியிடங்கள் அதிகரிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.எனவே தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலி பணியிடங்களில் எண்ணிக்கை 8,932 ஆக அதிகரித்துள்ளது .
இது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதிய தேர்வுகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும் மேலும் இந்த காலி பணியிடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்து பணி நியமனம் நடைபெறுவதற்குள் பத்தாயிரம் மேல் காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருக்கலாம் .எனவே கட் ஆப் மதிப்பெண்கள் மிக குறைவாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதி காத்துக் கொண்டிருந்த தேர்வுகள் மகிழ்ச்சி அடையலாம்.