துணை முதல்வராகிறார் உதயநிதி!.. இன்று பதவியேற்பு!.. யார் யாருக்கு என்னென்ன துறை?- இதோ பட்டியல்!..
Udhayanidhi becomes Deputy Chief Minister Breaking News Sep 29
Udhayanidhi becomes Deputy Chief Minister Breaking News Sep 29 அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக மட்டுமல்லாமல் கூடுதல் பொறுப்பும் ஏற்க உள்ளார் என்ன தெரியுமா?
தமிழக அமைச்சரவையில் ஏற்கனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். அவருக்கு தற்போது துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது. இதனுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையின் முக்கியத்துறையானது ஒதுக்கப்பட உள்ளது. திட்டமிடல் மற்றும் வளர்ச்சித் துறையானது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கூடுதலாக பார்க்க உள்ளார் என்பது மிக முக்கிய தகவல்.

தமிழக அமைச்சரவையில் மாற்றம்.
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.
கோவி.செழியன், சேலம் ராஜேந்திரன், நாசர், செந்தில் பாலாஜி ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம்.
மனோ.தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து விடுவிப்பு.
6 அமைச்சர்களுக்கு துறைகள் மாற்றி அமைப்பு.
- பொன்முடி – வனத்துறை.
- தங்கம் தென்னரசு – நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை
- மெய்யநாதன் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
- மதிவேந்தன் – ஆதிதிராவிடர் நலத்துறை.
- கயல்விழி – மனிதவள மேம்பாட்டு துறை
- ராஜ கண்ணப்பன் – காதி மற்றும் பால்வளத்துறை
நாளை மாலை 3:30 மணிக்கு ராஜ்பவனில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
சுற்றுலாத் துறை அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமச்சந்திரன், அரசுக் கொறடாவாக நியமனம்.
அரசுக் கொறடாவாக இருந்த கோவி.செழியன் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.